அன்னதானம் ரத்து, ஓட்டல்கள் அடைப்பு : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 12:59 pm
Tirupati closed - Updatenews360
Quick Share

சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 8:40 மணிக்கு அடைக்கப்பட்டது.

சந்திரகிரகணம் இன்று மதியம் மணி 2:39 முதல் மாலை மணி 6:19 வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 8. 40 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது.

கிரகணம் முடிந்தபின் இரவு 7: 20 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்படும்.

கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை முதல் இரவு 8 மணி வரை கட்டண சேவைகள், 300 ரூபாய் தரிசனம், இலவச தரிசனம் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரகணம் நடைபெறும் போது சாப்பிடுவதற்கு சாஸ்திர ரீதியான தடை உள்ளது. எனவே இன்று திருப்பதி மலையில் அன்னதானம் நடைபெறாது. திருப்பதி மலையில் ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கும் என்பது பக்தர்கள் கவனிக்கத்தக்கது ஆகும்.

Views: - 472

0

0