போதைப்பொருள் விவகாரம் : நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு இன்று விசாரணை

Author: Babu Lakshmanan
8 October 2021, 8:50 am
aryan khan - updatenews360
Quick Share

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் அந்தக் கப்பலில் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து,கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன்,எம்.டி.எம்.ஏ, ஹஷிஷ், உள்ளிட்ட சில போதைப் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், என்.சி.பி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தப் பார்ட்டியில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், , அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆர்யன்கானை கைது செய்த போலீசார், 3 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்தனர்.

நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்யன்கானுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை போலீசார் மீண்டும் காவலில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Views: - 406

0

0