பிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஆன்லைனில் ஏலம்: ரூ.200 இருந்தா போதும் நீங்களும் ஏலம் எடுக்கலாம்..!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 4:12 pm
Quick Share

டெல்லி: கடந்த ஓராண்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன.

பிரதமர் மோடிக்கு வரும் ஏராளமான பரிசுகளை மத்திய கலாச்சார துறை அமைச்சகம் ஏலம் விட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத் தொகை பல்வேறு திட்டங்களுகாக செலவழிக்கப்பட்டு வருகிறது. மோடி 2014ம் ஆண்டு பிரதமர் ஆனதில் இருந்து 2 முறை ஏலம் நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி கடந்த ஓராண்டாக பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஏலம் விடும் பணிகள் தற்போது தொடங்கி இருக்கின்றன. இந்த ஏலம் நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி வரை ஏலம் நடைபெறுகிறது.

https://pmmementos.gov.in என்ற இணையதளம் வாயிலாக மின்னணு முறையில் மட்டுமே ஏலம் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக மட்டுமே ஏலம் கேட்க முடியும். இந்த ஆண்டு ஏலத்தில் மொத்தம் 1300 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

ஏலத்தில் லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட பொருட்கள் மட்டுமின்றி ரூ.200 மதிப்பு கொண்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. எனவே உங்கள் ரூ.500 இருந்தாலும் போதும், பிரதமருக்கு வந்த பரிசு பொருட்களை நீங்கள் ஏலம் எடுக்கலாம். இந்த ஏலத்தில் கிடைக்க பெறும் தொகை கங்கை நதியின் தூய்மை திட்டடத்துக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் போட்டிகளில் தாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமருக்கு வழங்கிய அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம், சுற்றுலாத் துறை அமைச்சர் சத் பால் மகாராஜா வழங்கிய சதாமின் மாதிரி ஆகியவையும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது இது தவிர ஏராளமான பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.

Views: - 178

0

0