மர்ம நபர்களால் அனுமன் சிலை சேதம்..! உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் பதற்றம்..!

12 August 2020, 12:23 pm
Police_Updatenews360
Quick Share

முசாபர்நகரில் உள்ள ஒரு கோவிலில் அனுமன் சிலை மர்ம நபர்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது.

சிலை வைக்கப்பட்டிருந்த சைத்புரா கலா கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் இந்த சம்பவம் நேற்று நடந்தது.

கோவிலின் பூசாரி பண்டிட் பல்பீரின் புகாரின் பேரில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்தவால் காவல் நிலைய அதிகாரி சுபே சிங் தெரிவித்துள்ளார்.

உடைந்த சிலையை பார்த்தவுடன் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று காவல் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் பக்தர்களை சமாதானப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் சேதமடைந்த சிலை புதியதாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என சுபே சிங் மேலும் கூறினார்.

Views: - 10

0

0