கொலையே செய்தாலும் கணவனின் பென்சன் பணத்தைப் பெற மனைவிக்கு உரிமை உண்டு..! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

31 January 2021, 3:51 pm
Punjab_Haryana_High_Court_UpdateNews360
Quick Share

ஒரு அசாதாரண தீர்ப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் சமீபத்தில், கணவனைக் கொன்றாலும் மனைவி குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தங்க முட்டைகளை கொடுக்கும் கோழியை யாரும் கசாப்புக்கு அனுப்புவதில்லை. கணவனைக் கொன்றாலும் மனைவி குடும்ப ஓய்வூதியத்தை பெரும் தகுதியை உடையவராகிறார். குடும்ப ஓய்வூதியம் என்பது ஒரு அரசு ஊழியர் இறந்தால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும்.

கிரிமினல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் மனைவி குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்.” என்று ஜனவரி 25 அன்று ஹரியானாவில் ஒரு வழக்கை விசாரித்தபோது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2008’ஆம் ஆண்டில் காலமான ஹரியானா அரசு ஊழியர் தர்செம் சிங் தனது கணவர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அம்பாலாவைச் சேர்ந்த பால்ஜீத் கவுர் மீது, 2009’இல் தாக்கல் செய்த கிரிமினல் வழக்கில் 2011’இல் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

பால்ஜீத் கவுர் 2011 வரை குடும்ப ஓய்வூதியத்தைப் பெற்றார். ஆனால் ஹரியானா அரசு ஓய்வூதியம் வழங்கப்பட்டதை உடனடியாக நிறுத்தியது.

இதையடுத்து ஹரியானா அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் மனுதாரரின் குடும்ப ஓய்வூதியத்தை நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையுடன் இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கணவர் இறந்த பின்னர் 1972’ஆம் ஆண்டு சி.சி.எஸ் ஓய்வூதிய விதிகளின் கீழ் மனைவி குடும்ப ஓய்வூதியத்திற்கு உரிமை பெற்றவர் ஆகிறார். ஒரு அரசு ஊழியரின் விதவை மறுமணம் செய்த பின்னரும் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற தகுதியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0