காதல் மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் உல்லாசம்: கணவனை நய்யப்புடைத்த மனைவி..!!

5 March 2021, 12:33 pm
tirupathi1 - updatenews360
Quick Share

தெலுங்கானா: கொத்த குடாம் பகுதியில் மற்றொரு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய கணவனை கையும் களவுமாக பிடித்து, மனைவி தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்தாத்ரி மாவட்டம் கொத்த குடாம் பகுதிகள் வசிப்பவர் ராஜு. இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று பதினோரு வயதில் ஒரு மகனும் 9 வயதில் மற்றும் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1 ஆண்டுகளாக கணவன் சரியாக வீட்டுக்கு வராததை அடுத்து கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. இந்நிலையில் கணவர் ராஜு அதே பகுதியில் ஒரு திருமணமாகாத பெண்ணுடன் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து உறவினர்களுடன் அந்த வீட்டிற்குச் சென்ற மனைவி, கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை கையும் களவுமாக பிடித்து கணவன் மற்றும் அந்தப் பெண்ணையும் சரமாரியாக தர்மஅடி கொடுத்துள்ளார்.

பின்னர், இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காதல் திருமணம் செய்தும் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை மனைவி நய்யப்புடைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 147

0

0