கள்ளக்காதலால் விபரீதம்..! மனைவியின் தலையைத் துண்டித்து கள்ளக்காதலரின் வீட்டு முன் வைத்த கணவர்..!

Author: Sekar
16 October 2020, 10:30 am
Death_UpdateNews360
Quick Share

தெலுங்கானாவில் ஒரு நபர் தனது மனைவியின் தலையை துண்டித்து, துண்டிக்கப்பட்ட தலையை ஒரு ஆணின் வீட்டு வாசலில் வைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் சங்கரெட்டி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நிகழ்ந்தது.

அனந்தசாகர் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் ஜுரு சாயுலு 35 வயதான தனது மனைவி அம்ஷம்மாவை கோடரியால் வெட்டினார் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் துண்டிக்கப்பட்ட தலையை தனது இரு சக்கர வாகனத்தில் சுமார் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள நாராயன்கேட்டுக்கு எடுத்துச் சென்று, அவருடன் கள்ள உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரின் வீட்டு வாசலில் வைத்தார்.

நாராயன்கேட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் ரெட்டி, தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதாக சாயுலுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மோதல் முற்றிய நிலையில் புதன்கிழமை இரவு அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரத்தில், அவர் ஒரு கோடரியை எடுத்து மனைவியைத் தாக்கி கொன்றுள்ளார். பின்னர் மனைவியின் தலையை மட்டும் துண்டித்து, கள்ளக்காதல் வைத்திருப்பதாக சந்தேகப்படும் நபரின் வீட்டு வாசலில் வைத்துள்ளார்.

தலையில்லாத உடலை தனது வீட்டின் அருகிலுள்ள புதரில் எறிந்துவிட்டு, தலையை நாராயணகேட்டுக்கு கொண்டு சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

Views: - 52

0

0