தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியும் கற்றால் நாடு முன்னேறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 8:47 am
Amitshah -Updatenews360
Quick Share

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாப்பதும், உயர்த்துவதும் பட்டம் பெறும் உங்கள் அனைவரின் கடமை. காரணம், அவைதான் நமது கலாசாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணத்தை கொண்டிருக்கின்றன.

நாம் நமது மொழிகளை வலுவாக ஆக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2020-ன் முக்கியமான அம்சம், குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியை பயிற்றுவிப்பது.

குழந்தைகள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை கற்க வேண்டும். ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒரு குழந்தை குஜராத்தி மொழியுடன் இந்தியையும், அசாமை சேர்ந்த குழந்தை அசாம் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும்.

அதேபோல, தமிழர்கள் தமிழுடன் இந்தி மொழியை கற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.

இங்கு பட்டம் பெற்றோர், அவர்களது சமஸ்கிருத அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது உபநிஷதங்களிலும், வேதங்களிலும், சமஸ்கிருத மொழியிலும் அறிவுச்செல்வம் நிறைந்திருந்திருக்கிறது. அவற்றை நீங்கள் கற்கும்போது, வாழ்வின் எந்த பிரச்சினையும் உங்களுக்கு பிரச்சினையாகவே இருக்காது’ என்று அவர் கூறினார்.

Views: - 181

0

0