மும்பை மக்கள் 1 வாரம் வெளியே வராதீர்கள்..! எச்சரித்த வானிலை மையம்

10 August 2020, 9:34 am
Mumbai-rain1-updatenews360
Quick Share

மும்பை: மும்பையில் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் வரலாறு காணாத வகையில் ஒரு வாரம் கடந்தும் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று மழை கொட்டுகிறது.

மழையும் மட்டுமல்லாது, பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புக, பொது மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் 1 வாரம் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறிய வானிலை மையம் அறிவித்துள்ளதாவது: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டில் மும்பையில் 58.52 செ.மீ தான் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை மும்பையில் 59.76 செ.மீ மழை கொட்டி உள்ளது.

தென்மேற்கு பருவமழை 1 வார காலத்திற்கு மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் தீவிரமடையும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Views: - 7

0

0