நில அபகரிப்புக்கு நிரந்தர தீர்வு..! ஆதார் மாதிரியான அடையாள அட்டையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கும் மோடி..!

By: Sekar
8 October 2020, 2:25 pm
Modi_UpdateNews360 (2)
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை, 763 கிராமங்களில் உள்ள சுமார் 1,32,000 நில உரிமையாளர்களுக்கு தங்கள் வீடுகள் மற்றும் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும் விதமாக ஆதார் போன்ற அடையாள அட்டையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இது கிராமப்புறங்களில் சொத்து உரிமையாளர்கள் தங்கள் கடன் தேவைகளுக்கு சொத்துக்களை அடமானமாக வைப்பதை எளிதாக்குவதோடு பல ஆண்டுகளாக, சில நேரங்களில் பல தசாப்தங்களாக நீடித்த சொத்து தகராறுகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது.

இந்த அடையாள அட்டைகளை அவற்றின் உரிமையாளர்கள் கடன்களுக்கான நிதிச் சொத்துகளாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்களின் பதிவை வைத்திருக்க இது உதவும். அத்தகைய பதிவுகள் எதுவும் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 24’ஆம் தேதி பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் உரிமையாளரின் பெயருடன் பத்திரங்கள் ஒப்படைக்கப்படும். மேலும் 2024’க்குள் நாட்டில் உள்ள 6.40 லட்சம் கிராமங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் வரைபடமாக்கும்.

ஹரியானாவைச் சேர்ந்த 221, கர்நாடகாவைச் சேர்ந்த 100, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 100, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 44, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 346 மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 50 பேர் உட்பட 763 கிராமங்களைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் சொத்து அட்டைகள் இந்த தொடக்க விழாவில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

உண்மையில் இந்த திட்டத்தின் நோக்கம் கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை வழங்குவது தான் என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர். கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களின் நிலம் ட்ரோன்களைப் பயன்படுத்தி சமீபத்திய கணக்கெடுப்பு முறைகளைப் பயன்படுத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில வருவாய் துறைகள் மற்றும் இந்திய சர்வே ஆகியவற்றின் உதவியுடன் எல்லை நிர்ணயம் செய்யப்படும்.

இது கிராம வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை கடனுக்கான பிணையமாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் விலையுயர்ந்த கிராமப்புற வழக்குகளையும் குறைக்க உதவும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நிலத்தின் உரிமையை டிஜிட்டல் முறைக்கு மாற்றி ஆதார் போன்ற ஒரு அடையாள அட்டையை கொடுப்பதன் மூலம், நில அபகரிப்பும் தடுக்கப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Views: - 39

0

0