இந்திய ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு….!!

14 November 2020, 9:07 am
India_pakistan_Border_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கு குழிகளில் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்திய ராணுவ நிலைகளையும், மக்கள் வாழும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து அடிக் கடி அத்துமீறிய தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் நேற்று எல்லை மீறிப்போனது. அங்கு கடந்த சில நாட்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் தாக்குதல்களை பாகிஸ்தான் அரங்கேற்றியது. எல்லையோரம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் எல்லை பாதுகாப்பு படையின் பெரும்பாலான பிரிவுகள் அனைத்தும் நேற்று காலை முதல் பாகிஸ்தானின் தாக்குதல்களை எதிர்கொண்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலால் எல்லை நெடுகிலும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் அதற்கு இந்திய வீரர்களின் வலிமையான பதிலடி போன்ற நடவடிக்கைகளால் காஷ்மீர் எல்லையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து எல்லை முழுவதும் இந்திய படைகள் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய இராணுவம் இதுகுறித்து பதிவிட்டு உள்ள பல வீடியோக்கள் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பல பாகிஸ்தான் முகாம்கள் அழிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. ஒரு வாரத்திற்குள் இரண்டாவது ஊடுருவல் முயற்சியாகும் நவம்பர் 7-8 அன்று மச்சால் பகுதியில் ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Views: - 30

0

0