உலக அளவில் கவனம் ஈர்த்த தமிழரின் கொரோனா தடுப்பூசி..! ஐசிஎம்ஆர் தகவல்..!

25 December 2020, 4:52 pm
Dr.Krishna_Ella_CMD_Bharat_Biotech_UpdateNews360
Quick Share

தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவாக்சின் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி தற்போது இந்தியாவில் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின் குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது என்று ஐசிஎம்ஆர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இருந்து உருவாக்கப்பட்ட தரவு கோவாக்சினின் ஈர்க்கக்கூடிய பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் அவற்றை வெளியிடுவதில் லான்செட்டின் ஆர்வத்தைத் தூண்டுகிறது என மேலும் தெரிவித்துள்ளது.

“முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட கோவாக்சின் சோதனை முடிவுகள் இந்தியாவில் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைக்கான பாதையை அமைத்துள்ளன. இது தற்போது 22 தளங்களில் நடந்து வருகிறது” என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கோவாக்சினைப் போல் இந்தியாவில் மேலும் சில தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது  

Views: - 0

0

0