நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் இஸ்ரோ : சந்திராயன் 3 கவுண்ட்டவுன் நாளை தொடக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 9:36 pm
Chandrayaan 3 - Updatenews360
Quick Share

ஸ்ரீஹரிகோட்டா, பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வுசெய்ய ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இந்தநிலையில், சந்திரயான் – 3 திட்டத்திற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் – 3 திட்டத்திற்கான கவுண்ட்டவுன் 26 மணி நேரம் இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் வெற்றி சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியா தேசிய அளவில் முக்கியத்துவமான பங்கை ஆற்றி வருகிறது. எனவே இந்த பணி மிக மிக முக்கியமானது என சந்திரயான்-1-ன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

Views: - 230

0

0