பிரபலமான, அன்பான, துடிப்பான மற்றும் தொலைநோக்குத் தலைவர் மோடி..! உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா பாராட்டு..!

6 February 2021, 3:28 pm
Justice_MR_Shah_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமானவர் மட்டுமல்லாது அனைவரையும் நேசிக்கும், துடிப்பான மற்றும் தொலைநோக்குடைய தலைவர் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டங்களின்போது தெரிவித்தார்.

குஜராத் உயர்நீதிமன்றம் தனது வைர விழாவை இன்று கொண்டாடியபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நினைவு தபால்தலையை வெளியிட்டார்.

“குஜராத் உயர்நீதிமன்றத்தின் நினைவு முத்திரையை அதன் 60 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன்,எங்கள் மிகவும் பிரபலமான, அன்பான, துடிப்பான மற்றும் தொலைநோக்குத் தலைவரான மாண்புமிகு பிரதமர் நரேந்த மோடி வெளியிடும் இந்த முக்கியமான செயல்பாட்டில் பங்கேற்பதில் பெருமிதம் மற்றும் பாக்கியம் அடைகிறேன். இந்த விழாவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த பாக்கியமாக நான் கருதுகிறேன்.” என்று நீதிபதி எம்.ஆர்.ஷா நிகழ்ச்சியில் பேசினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட பிரதமருக்கு நீதிபதி ஷா நன்றி தெரிவித்தார்.

“குஜராத் உயர்நீதிமன்றத்தின் சார்பாகவும், குஜராத்தில் உள்ள நீதித்துறை சகோதரத்துவத்தின் சார்பாகவும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தபால் தலையை வெளியிட்டமைக்கு நன்றி. இது வரும் ஆண்டுகளில் நினைவுகூரப்படும்” என்று அவர் கூறினார்.

நீதிபதி ஷா 22 ஆண்டுகளாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த நாட்களை நினைவுபடுத்தினார். அதன்பிறகு உயர்நீதிமன்றத்தில் மேலும் 14 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தார்.

“குஜராத் உயர்நீதிமன்றம் எனது கர்மபூமி. நான் ஒரு வழக்கறிஞராக சுமார் 22 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். 14 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றினேன். குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதில் பெருமைப்படுகிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி மேலும் கூறுகையில், குஜராத் உயர்நீதிமன்றம் நீதித்துறையின் சுதந்திரத்துக்காகவும், தேவை ஏற்படும் போதெல்லாம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எப்போதும் நிற்கிறது என்றார்.

“அவசரகால சமயத்தில் கூட, இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நின்றனர்” என்று அவர் கூறினார்.

இந்தியாவில் நீதி அமைப்பு எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார். அதே நேரத்தில் நீதி தாமதங்களை குறைக்க செயற்கை நுண்ணறிவின் திறனை மோடி மேலும் எடுத்துரைத்தார்.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், வழக்கறிஞர் கமல் திரிவேதி ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.

Views: - 0

0

0

1 thought on “பிரபலமான, அன்பான, துடிப்பான மற்றும் தொலைநோக்குத் தலைவர் மோடி..! உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா பாராட்டு..!

Comments are closed.