திருமணத்திற்காக மதமாற்றத்தில் ஈடுபடத் தடை..! விரைவில் புதிய சட்டம்..! கர்நாடக பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு..!

4 November 2020, 10:09 am
marriage_up_taliban_updatenews360
Quick Share

திருமணத்திற்காக மத மாற்றத்தில் ஈடுபடுவதை தடை செய்ய கர்நாடக அரசு விரைவில் ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடகாவின் முன்னாள் கன்னட மற்றும் கலாச்சார அமைச்சருமான சி.டி.ரவி இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஜிகாதிகள் எங்கள் சகோதரிகளின் கௌரவத்தை அகற்றும்போது நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். மதமாற்ற செயலில் ஈடுபடும் எவரும் கடுமையான மற்றும் விரைவான தண்டனையை சந்திக்க நேரிடும்.” என எச்சரித்துள்ளார் 

இதற்காக ஒரு சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இருக்கும் என்று அவர் கூறினார்.

லவ் ஜிகாத்துக்கு எதிராக தனது அரசாங்கம் ஒரு பயனுள்ள சட்டத்தை கொண்டு வரும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு ரவியின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கள் அடையாளங்களை மறைத்து சகோதரிகள் மற்றும் மகள்களின் மரியாதையுடன் விளையாடியவர்களுக்கு ஆதித்யநாத் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டார். “அவர்கள் தங்கள் வழிகளைச் சரிசெய்யவில்லை என்றால், அவர்களின் இறுதி ஊர்வலங்கள் நடக்கும் நிலை உருவாகும் என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து பாஜக ஆளும் ஹரியானா மற்றும் மத்தியப்பிரதேசமும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0

1 thought on “திருமணத்திற்காக மதமாற்றத்தில் ஈடுபடத் தடை..! விரைவில் புதிய சட்டம்..! கர்நாடக பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு..!

Comments are closed.