திவாலாகிப் போன அரசின் கஜானா… திடீரென புது உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ; கதிகலங்கிப் போன அமைச்சர்கள்…!!!

Author: Babu Lakshmanan
24 August 2023, 4:57 pm
Quick Share

அரசின் கஜானா காலியாகிப் போனதாகவும், அமைச்சர்கள் பணத்தை கவனமாக செலவு செய்யுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், அமைச்சர்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்கான நிதிகளை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியிருக்கையில், பணப்பட்டுவாடா செய்யப்படாததால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஓணம் பண்டிகையொட்டி அரசின் செலவுகள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், வருவாய் குறைந்துள்ளதால் நிதி நெருக்கடி நிலவுவதாகக் கூறிய முதலமைச்சர் பினராயி விஜயன், பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தாததே இந்த நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், ஓணம் முடிந்ததும் கஜானா காலியாகிவிடும் என்று அமைச்சர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 239

0

0