முழுமையடையாத ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகமா? பிரதமர் மோடி மீது சங்கராச்சியார் பகீர் குற்றச்சாட்டு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 8:50 am
Modi
Quick Share

முழுமையடையாத ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகமா? பிரதமர் மோடி மீது சங்கராச்சியார் பகீர் குற்றச்சாட்டு..!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் வைத்துள்ளார்.

அதோடு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த அவர்.. நரேந்திர மோடி தனது காசி வழித்தட திட்டத்திற்காக பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களை இடித்து அதில் இருந்த சிலைகளை குப்பையில் போட்டார்.

இந்த விழா “சாஸ்திரங்களுக்கு எதிராக” அல்லது “புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக” நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை.

ஆனால் இந்து மதத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதும், மற்றவர்கள் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்துவதும் சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. அவர்கள் (கோயில் கட்டுமானம் மற்றும் விழா அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்) இந்து மதத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகளை புறக்கணிக்கிறார்கள்.

விதிகளை மீறிவிட்டனர். கோவிலை கட்டி முடிக்காமல் ராம பிரான் பிரதிஷ்டை விழாவை நடத்துவது இந்து மதத்தின் முதல் மீறல் ஆகும். இதற்கு “அவ்வளவு அவசரம் தேவையில்லை,”.

இப்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, முழுமையடையாத கோவிலை திறந்து வைத்து அங்கு கடவுள் சிலையை நிறுவுவது மோசமான யோசனை.

ஒருவேளை அவர்கள் (நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள்) எங்களை மோடிக்கு எதிரானவர்கள் என்று அழைப்பார்கள். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அதே நேரத்தில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது, என்று சங்கராச்சாரியாரான அவிமுக்தேஸ்வரானந்த் கூறினார்.

Views: - 217

0

0