மணிப்பூரில் திட்டமிட்டபடி யாத்திரையை துவக்கினார் ராகுல்.. 67 நாட்கள்.. 6 ஆயிரம் கிலோ மீட்டர் ஒற்றுமை பயணம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 7:59 pm
Rahul
Quick Share

மணிப்பூரில் திட்டமிட்டபடி யாத்திரையை துவக்கினார் ராகுல்.. 67 நாட்கள்.. 6 ஆயிரம் கிலோ மீட்டர் ஒற்றுமை பயணம்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023 ஜனவரி மாதம் காஷ்மீர், ஸ்ரீநகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவு செய்யப்பட்டது.

இந்த யாத்திரையில் பாஜகவின் பிரிவினைவவாத மாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவம், வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் முக்கிய நோக்கமாகக் கொண்டு யாத்திரை நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா , தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக சுமார் 4,000 கிலோ மீட்டர் அளவுக்கு பயணித்து காஷ்மீர் ஸ்ரீ நகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்தது

இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக கிழக்கிலிருந்து, மேற்கு நோக்கி தனது ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கடந்த மே மாதம் முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மணிப்பூரில் இருந்து இரண்டாம் கட்ட யாத்திரையை இன்று ராகுல் காந்தி தொடங்கினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை எனும் பெயரில் தவ்பால் மாவட்டத்தில் ப்ரமாண்டமாக தொடக்க நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த யாத்திரையானது 15 மாநிலங்கள் வழியாக 6713 கிலோ மீட்டர் தூரம் வரை, 67 நாட்கள் நடைபெறுகிறது. செல்லும் வழியில் அந்தந்த மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் யாத்திரை தொடங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அங்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. இதனை அடுத்து தௌபால் மாவட்டத்தில் யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது.

1) பொங்கல் பண்டிகைக்கு மக்களை நல்லா ‘பொங்க; வெச்சுட்டீங்க!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பயணிகள் பல சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, அங்கிருந்தே அவர்கள் செல்ல பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு. பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

2) ஒரே போடு போட்ட அண்ணாமலை… உடனே மறுப்பு தெரிவித்த தமிழக அரசு!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்தை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. மேலும், பிரதமரின் புதிய கல்வி கொள்கை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தாய் மொழியை அடிப்படையாக கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களில் இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்து விட்டது. தொழில்நுட்பம் சார்ந்து தமிழகத்திற்கு யாரும் வகப்பெடுக்க தேவையில்லை. மற்ற மாநிலங்களை விட தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னோடியாக வளர்ந்து வருகிறது. பெரியார் காட்டிய பாதையில் தமிழக அரசு முற்போக்கான பாதையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அண்ணாமலை போன்றோர் பகல் கனவு போல மும்மொழிகல்விக் கொள்கையானது தமிழகத்தில் ஒருபோதும் உருவாக வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை தொடரும் என தமிழக அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட யாத்திரையை துவங்கினார் ராகுல்காந்தி!!

இரண்டாம் கட்டமாக கிழக்கிலிருந்து, மேற்கு நோக்கி தனது ஒற்றுமையா யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கடந்த மே மாதம் முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மணிப்பூரில் இருந்து இரண்டாம் கட்ட யாத்திரையை இன்று ராகுல் காந்தி தொடங்கினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை எனும் பெயரில் தவ்பால் மாவட்டத்தில் ப்ரமாண்டமாக தொடக்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த யாத்திரையானது 15 மாநிலங்கள் வழியாக 6713 கிலோ மீட்டர் தூரம் வரை, 67 நாட்கள் நடைபெறுகிறது. செல்லும் வழியில் அந்தந்த மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் யாத்திரை தொடங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அங்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. இதனை அடுத்து தௌபால் மாவட்டத்தில் யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது கொடூரத் தாக்குதல்!

கோவை நீலி கோணம் பாளையம் பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டி வந்துள்ளனர் அப்போது நேற்று இரவு அடையாளம் தெரியாத பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து இவர்கள் இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஆசிக் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த நிலையில் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். இருந்தபோதும் புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அதனை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூடிய விரைவில் யார் இந்த குற்றத்தை செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

///

சினிமா REVIEW கொடுக்கத்தான்
CMக்கும் அவரது மகனுக்கு நேரம் இருக்கு

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வருகின்றன.

புதிய பேருந்து நிலையம் என்பதால், பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, ஜனவரி 14 வரை முன்பதிவு செய்யப்பட்ட விரைவு போக்குவரத்து கழக (SETC)பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

எனினும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஏராளமானோர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாதவர்களும் ஆயிரக்கணக்கானோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏற வந்தனர். அவர்களுக்கு அங்கு பேருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, அங்கிருந்தே அவர்கள் செல்ல பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு.

பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு. மக்கள் படும் பாட்டை எல்லாம் எப்படி பார்ப்பார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

Views: - 287

0

0