கேரளா ஷர்மிளா மீது மான நஷ்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Author: Udhayakumar Raman
29 November 2021, 9:07 pm
Quick Share

கேரளா ஷர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நெல்லை டி.ஐ.ஜி அலுவலகத்தில் கேரளத்தை ஷர்மிளா என்பவர் முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் மீது 14 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், தனது உயிருக்கு முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரால் ஆபத்து இருப்பதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பணமோசடி குறித்து கேரள அமலாக்க அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்தார்.மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குடும்ப நண்பர் என்றும், அவர் ஏராளமான பணத்தை தங்கமாக மாற்றி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, கேரள பெண் ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், கேரளா ஷர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் நெல்லையில் என் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான புகார் அளித்துள்ளார் எனவும், பல குற்றப் பின்னணி கொண்ட ஷர்மிளா தொடர்பாக அமலாக்கத்துறையில் இருந்து அழைப்பாணை வந்துள்ளது, அழைப்பாணை வந்ததன் பேரில் சாட்சியாக நேரில் ஆஜராகி உரிய விவரம் அளித்துள்ளேன் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Views: - 228

1

0