36 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எல்விஎம்-3 : புதிய சாதனை படைத்தது இஸ்ரோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 10:17 am
Rocket - Updatenews360
Quick Share

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் ‘எல்.வி.எம்3-எம்3’ என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

இந்த ராக்கெட் ‘ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3’ என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தபட்டு உள்ளன.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில்ஏவப்பட்டது.

43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது இந்த எல்.வி.எம்3 – எம்3 ராக்கெட்.. 5.9 டன் எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களை தாழ்வான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது..450 கி.மீ. தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்றுவட்ட பாதையில் செயற்கைகோள்கள் .நிலைநிறுத்தப்படவுள்ளன

Views: - 322

0

0