சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் : மகர விளக்கு விஷேஷ பூஜை விஷேஷம்

15 January 2020, 8:39 am
SABARIMALAI-UPDATENEWS360
Quick Share

கேரள மாநிலத்தின் சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் திருக் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. சபரிமலை திருக்கோவிலில், மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்ற வைபவமாகும். து. எனவே சபரி மலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ஆயிரம் காவலதுறையினர்கள் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள்.

சபரி மலையில் மகர விளக்கு பூஜைக்கு வேண்டி டிசம்பர் மாதம் 30 -ம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் சன்னதிதான நடை திறக்கப்பட்டது. மகர ஜோதி சிறப்பு பூஜை வைபவத்திற்கு, ஸ்வாமி ஐயப்பனுக்கு அணிவிக்கக் கூடிய திருவாபரணங்கள் கொண்ட திருவாபரான பெட்டியானது, பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட இருக்கின்றது. திருவாபரணங்கள் கொண்ட பெட்டியானது, சபரிமலை சன்னிதானம் வந்தடைந்த பின்பாக, ஸ்வாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்வாமி ஐயப்பனுக்கு, மகர ஜோதி தரிசன விஷேஷ விளக்கு பூஜை நடத்தப்படும்.

மகரவிளக்கு பூஜை நிகழும் தருணத்தில், சபரி மலையில் அமைந்து இருக்கின்ற, பொன்னம்பலம் மேட்டில், மகர ஜோதி தரிசனம் கிடைக்கப்பெறும் வைபவம் நிகழ்ந்தேறும். சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவமாக, காட்சி அளிப்பதாக, அனைவராலும் நம்பப்படுகின்றது. மகரவிளக்கு பூஜைக்கு முன் மகர சங்கராந்தி சிறப்பு பூஜையும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா !-