111 பேர் பலியானதற்குக் காரணம் ஒரு பெயிண்ட் கடை உரிமையாளரா..? பஞ்சாபை உலுக்கிய போலி மதுபானம்..! வலைவீசி பிடித்த போலீஸ்..!

4 August 2020, 10:30 pm
Fake_Alcohol_UpdateNews360
Quick Share

போலி மதுபானம் குடித்து 111 பேர் பலியான வழக்கில் ஒரு புதிய திருப்புமுனையாக, லூதியானாவை தளமாகக் கொண்ட பெயிண்ட் கடை உரிமையாளரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லூதியானா பெயிண்ட் கடையின் உரிமையாளர் ராஜீவ் ஜோஷி நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று டிஜிபி டிங்கர் குப்தா தெரிவித்துள்ளார். அவர் மூன்று டிரம்களைக் கொண்ட மெத்தனாலை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

பஞ்சாப் மற்றும் டெல்லியில் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு வகையான ஆல்கஹால் கொள்முதல் செய்ததாகக் கூறிய ஜோஷி அளித்த தகவலை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முழு துயர சம்பவத்திலும் ஜோஷி மற்றும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக பாட்டியாலாவில் நடந்த 13 மரணங்கள் தொடர்பான வழக்கில், தப்பி ஓடிய ஒரு குற்றவாளி, பாட்டியாலாவின் ஹதி கேட்டின் தர்மிந்தர் கைது செய்யப்பட்டார் என்று டிஜிபி கூறினார்.

அவரிடமிருந்து 50 லிட்டர் ஆல்கஹால் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார்.

மேலும், மாநில காவல்துறையினர் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் தழுவிய அளவில் ஒரு பெரிய நடவடிக்கையைத் தொடங்கினர். இதன் மூலம் 238 வழக்குகளில் 184 பேரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இடங்களில் நடத்திய இந்த மாநில அளவிலான சோதனைகளில் மொத்தம் 5,943 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 1,332 லிட்டர் உரிமம் பெற்ற மதுபானம் மற்றும் 32,470 கிலோ லஹான் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

மூத்த அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடப்பட்ட இந்த சோதனைகள், சட்டவிரோத மதுபானங்களை விற்பனை/கொள்முதல்/தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட 184 குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுத்தன.

டிஜிபி அறிக்கையின் படி, ஜோஷி மற்றும் பிற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது, மெத்தனால் சப்ளை சங்கிலி உள்ளிட்ட மோசமான மதுபானங்களை உற்பத்தி செய்வதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள மேலும் சில முக்கிய நபர்களை அடையாளம் காண காவல்துறையினரை வழிநடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக இதேபோன்ற துரதிர்ஷ்டவசமான போலி மதுபானத் துயரங்கள் முன்னதாக மும்பையில் ஜூன் 2015’லும் பீகாரில் 2016’லும் 167 பேர் இறந்தனர்.

தற்போது, மெத்தனால் சந்தையில் எளிதில் கிடைக்கிறது. மேலும் பிற தொழில்களில் வார்னிஷ் தயாரித்தல் உட்பட பல தொழில்துறை பயன்பாடுகளும் உள்ளதால் இவை எளிதில் கிடைப்பதை வைத்து சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவது அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.