மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் எல்லா மாநிலங்களிலும் மணிப்பூர் சம்பவங்கள் நடக்கும்.. எச்சரிக்கும் நிர்மலா சீதாராமனின் கணவர்!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 2:19 pm
Nirmala
Quick Share

மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் எல்லா மாநிலங்களிலும் மணிப்பூர் சம்பவங்கள் நடக்கும்.. எச்சரிக்கும் நிர்மலா சீதாராமனின் கணவர்!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள், வெற்றி வியூகங்கள் என அரசியல் கட்சிகள் படுவேகமாக பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், பாஜக அரசு மீது தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். தற்போது அவர் கூறிய கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தனையாளர் அமைப்பு சார்பில் தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழல் குறித்த கலந்துரையாடல் நிக்ழச்சி நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

மேலும் படிக்க: வாக்கு சேகரிக்க வரவில்லை… உங்கள் ஆசி வாங்கவே வந்தேன் : முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!

இதில் பேசிய பரகலா பிரபாகர், உலகின் மிகப்பெரிய கட்சி என கூறப்படும் பாஜகவில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மணிப்பூர் சம்பவங்கள் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் என எச்சரித்துள்ளார்.

அதே போல மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறும்போது, பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Views: - 179

0

0