அடுத்த மாதம் வருகிறது மாஸ் திட்டம்… சுதந்திர தின விழாவில் இனிப்பான செய்தி சொன்ன பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 12:28 pm
PM Modi - Updatenews360
Quick Share

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களுக்கு பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதில் குறிப்பாக விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டம் அடுத்த மாதம் துவங்க உள்ளது என அறிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், பாரம்பரிய திறன் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாரம்பரிய திறமைகள் கொண்ட நபர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் (பிஎம் விகாஸ் – விஸ்வகர்மா யோஜனா திட்டம்), கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அளவு மற்றும் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் அவர்களுக்கு ஏற்படுத்தி தரப்படும் என்றுள்ளனர். மேலும், பிரதமர் உரையில், புதிய நம்பிக்கையோடு இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.

முத்ரா யோஜனா திட்டத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஏழைகளை மேம்படுத்துவதற்காகத்தான் கரீக் கல்யாணி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வறுமைக் கோட்டில் இருந்து 12.5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், வரும் 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்றும் எங்களுக்கு வாக்களித்தால் சீர்திருத்தத்திற்காக உழைப்போம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Views: - 401

0

0