கேரள திரையரங்குகளில் வெளியானது ‘மாஸ்டர்’: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த பார்வையாளர்கள்..!!

13 January 2021, 3:17 pm
kerala theatre - updatenews360
Quick Share

கேரளா: கேரளாவில் 10 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு, இன்று ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியிடப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 3ம் தேதி திரையங்குகளை திறக்க அரசு கேரளா அரசு உத்தரவிட்டது.

இன்றைய தினம் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து பார்வையாளர்கள் இந்த திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். எனினும், கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்குகள் திறக்கப்படவிலை.

மேலும் கேரளாவில் இது வரையிலும் 85 படங்கள் திரையிடாமல் உள்ளன.தொடர்ந்து
இன்று முதற்கட்டமாக மாஸ்டர் படம் திரையிடப்பட்டது. அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதலின்படி, பார்வையாளர்கள் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

Views: - 4

0

0