உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை: பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு
Author: kavin kumar11 January 2022, 9:13 pm
உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.இந்த நிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் எம்பி சந்திரா மிஸ்ரா பேசுகையில்,சமாஜ்வாதியிடம் 400 உறுப்பினர்களே இல்லாத நிலையில், எப்படி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள். இந்த முறை பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் உ.பியை ஆளப்போவதில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தான் ஆளப்போகிறது என தெரிவித்தார்.
0
0