அரசு திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க அலைக்கழித்த வங்கிகள்..! வச்சி செய்த நகராட்சி அதிகாரிகள்..!

2 February 2021, 1:35 pm
Garbage_bank_gates_UpdateNews360
Quick Share

போபாலில் ஒரு நகராட்சி அதிகாரி அரசாங்க திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கிகளுக்கு வெளியே குப்பைகளை கொட்ட உத்தரவிட்டார். ரைசன் மாவட்ட தலைமையகத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேகுமஞ்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்கள் நேற்று வங்கிகள் திறக்கப்பட்டவுடன் வங்கிகளுக்குள் நுழைந்து குப்பைகளை உள்ளே கொட்டினர். சில தொழிலாளர்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளை கொட்டினர்.

பேகுமஞ்ச் நகராட்சியின் தலைமை நகராட்சி அதிகாரி தீரஜ் சர்மா கூறுகையில், “பிரதமர் ஸ்வயம் நிதி யோஜனாவின் கீழ் கடன் விநியோகத்திற்காக 1,800 பயனாளிகளை நகராட்சி அமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது. அதில் 30 சதவீதம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.”என்றார்.

இந்நிலையில் தெரு விற்பனையாளர்கள் ரூ 10,000 மதிப்புள்ள கடன்களுக்காக வங்கிகளில் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததை அடுத்து வங்கிகளுக்கு உரிய பாடம் புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஷர்மா மேலும், “கடன்களை வழங்குவதற்காக எங்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். வங்கி அதிகாரிகள் கடன்களை விரைவாக வழங்குவதாக உறுதியளித்தவுடன் குப்பை அகற்றப்பட்டது.” எனக் கூறினார்.

குப்பைகளை குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு வெளியே கொட்டியதாகவும், வங்கிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அகற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் வங்கிகள் கடன்களை வழங்காவிட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Views: - 0

0

0