அப்பளம் சாப்பிடுங்க… கொரோனா சரியாயிடும்…! சொன்ன அமைச்சருக்கு பாதிப்பு

9 August 2020, 9:49 pm
Quick Share

டெல்லி: அப்பளம் சாப்பிட்டால் கொரோனா சரியாகிவிடும் என்று கூறிய மத்திய அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளும் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஒரு செய்தியை அண்மையில் கூறி இருந்தார். அதில் பாபிஜி பப்பட் என்னும் அப்பளப் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு, தற்சார்பு இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டது தான் இந்த அப்பளம்.

கொரோனாவை எதிர்த்து போராடும், எதிர்ப்பு சக்திகளை உருவாக்க உதவும். ஆகவே இதை சாப்பிடுங்கள். அப்பளத்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்கள் என்று வீடியோ வடிவில் பேசியிருந்தார்.

அவரது இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமர்சனங்களும் எழுந்தன. இந் நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அர்ஜுன் ராம் மேக்வால் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:  கொரோனா சோதனையில் எனக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது. மீண்டும் சோதித்த போது கொரோனா பாசிட்டிவ் என்று வந்து இருக்கிறது.

உடல்நிலை சீராகவே உள்ளது. ஆனாலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடந்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 13

0

0