“மோடி மேஜிக் தான் காரணம்”..! தேர்தல் வெற்றி குறித்து பீகார் துணை முதல்வர் கருத்து..!

11 November 2020, 6:21 pm
Sushil_Kumar_Modi_UpdateNews360
Quick Share

பீகார் மக்கள் வளர்ச்சிக்கு ஆதரவான அரசாங்கத்திற்கு வாக்களித்தனர் என்றும் இல்லையெனில் ஆர்.ஜே.டி இப்போது ஆட்சி செய்திருக்கும் என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறினார்.

மோடி மேஜிக் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வருகிறது என்பதற்கான அடையாளம் தான் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றி என துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறினார்.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் ஒப்பிடும்போது பாஜக அதிக இடங்களை வென்றது குறித்து பேசிய சுஷில் குமார் மோடி, எல்லா கட்சிகளும் சம எண்ணிக்கையிலான இடங்களை வெல்லவில்லை என்பது முக்கியமல்ல என்றும் கூட்டணியின் வெற்றி தான் முக்கியம் என்றும் கூறினார்.

“ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியில் பாஜகவும், பாஜகவின் வெற்றியில் ஐக்கிய ஜனதா தளமும் பங்கு வகித்தன. ஐக்கிய ஜனதா தளம், பாஜக, விஐபி மற்றும் எச்ஏஎம் இணைந்து செயல்பட்டன. பின்னர் இந்த வெற்றியை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.” என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மேலும் கூறினார்.

“பீகார் மக்கள் நான்காவது முறையாக என்.டி.ஏ மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இது சாதாரணமானது அல்ல. இந்திய அரசியலில், நான்காவது முறையாக மக்கள் நம்பிய முதல்வர்கள் மிகக் குறைவு. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். எந்த குழப்பமும் இல்லை.”  என மேலும் தெரிவித்தார்.

பா.ஜ.க தலைவர் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, ​​அவர் மாநிலத்தில் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்பதால் இதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

Views: - 19

0

0