6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய் : மூட நம்பிக்கையால் விபரீதம்!!

16 April 2021, 11:54 am
Telangana Narabali-Updatenews360
Quick Share

தெலுங்கானா : சூரியா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா – புஜ்ஜி தம்பதியினருக்கு பிறந்த ஆறு மாத குழந்தை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் இரண்டாவதாக புஜ்ஜி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கிருஷ்ணாவின் மனைவி புஜ்ஜி கடந்த ஆறு மாதமாக தனிமையில் இருந்து வருகிறார். பித்து பிடித்தது போல காணப்பட்ட மனைவிக்கு நாக தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

இதை நம்பிய புஜ்ஜியிடம், தோஷத்தை போக்க தங்களது 6 மாத குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என ஜோசியர் கூறினர். இதையடுத்து 6 மாத குழந்தையை நேற்று இரவு நரபலி கொடுத்து பக்கத்திலேயே ஒரு சிவன் புகைப்படத்தையும் வைத்து கதவை மூடிக்கொண்டு பூஜை செய்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்க்கையில் குழந்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. உடனடியாக பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புஜ்ஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தையில்லாமல் எத்தனையோ தம்பதிகள் மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை பெற்று வரும் நிலையில், பெற்ற குழந்தை என்று பாராமல் நரபலி கொடுத்த கொடூரத்தாயின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 26

0

0