இன்ஸ்டாவில் லைக் வாங்க சாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு

Author: Udhayakumar Raman
17 September 2021, 1:34 pm
Quick Share

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வீடியோ பதிவு ஒன்றிற்காக இந்த நடனம் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை.இருப்பினும் இதை அறிந்த மத்திய பிரதேச அமைச்சர் அப்பெண்ணின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது அந்த பெண் இந்தூரை சேர்ந்த ஸ்ரேயா கல்ரா என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதற்காக இதுபோன்று நடனமாடியது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது, ஸ்ரேயா கல்ரா மீது இந்திய தண்டனைச் சட்டம் 290-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.இதுகுறித்து கூறிய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, அப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பின் ஷ்ரேயா கல்ராவைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து கூறிய ஷ்ரேயா கல்ரா தன் சமூகவலைத்தளத்தில், ‘நான் சிவப்பு விளக்குப் போட்டதும் வாகன ஓட்டிகள் நிற்க வேண்டும். அப்போது தான் பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியும் என்ற விழிப்புணர்வுக்காக தான் இந்த நடன வீடியோவை எடுத்தேன். ஆனால் இந்த வீடியோ இப்படி சர்ச்சையாகும் என்று தெரியவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Views: - 146

0

0