வெள்ளம் பாதித்த மும்பையில் ஒவ்வொரு நபருக்கும் 10,000 ரூபாய் நிவாரணம்..! பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்..!

6 August 2020, 7:48 pm
mumbai_rains_updatenews360
Quick Share

டெல்லியில் வரலாறு காணாத கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று நிலைமையை மறுபரிசீலனை செய்தபோது, மும்பையைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் மாநில அரசு ரூ 10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது. தற்போதைய நிலைமையை இயற்கை பேரிடர் என்று அறிவிக்குமாறு பாஜக மாநில அரசிடம் கேட்டுக் கொண்டது.

மும்பையைப் பொறுத்தவரை கடந்த 2005’ஆம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பாதிப்புகள் தற்போதைய கனமழையால் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனாவின் முக்கிய மையமாக மும்பை ஏற்கனவே சோதனையில் உள்ள நிலையில், தற்போதைய வெள்ளம் மக்களை வாட்டி வதைக்கிறது.

பாஜக எம்எல்ஏ அதுல் பட்கல்கர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி, இரட்டைப் பாதிப்பால் அவதிப்படும் மும்பைவாசிகளுக்கு ஒவ்வொரு நபருக்கும் ரூ 10,000 ரூபாய் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மும்பை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் 294 மிமீ மழை பெய்ததால், நீர் வெளியேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பட்கல்கர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். நிலைமையை இயற்கை பேரழிவு என்று அறிவித்து குடிமக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் மாநில அரசை வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்கனவே தினசரி கூலித் தொழிலாளர்களைத் தாக்கியதாக தனது பட்கல்கர் கூறினார். கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லாதபோது நகரத்தில் மழை பெய்துள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசை வேகமாக செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Views: - 2

0

0