ஜம்முவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்பு..! வலுவான ஆதாரம் சிக்கியது..!
21 November 2020, 10:47 amஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டாவில் கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து டிஜிட்டல் மொபைல் வானொலியை போலீசார் மீட்டுள்ளனர்.
அவை பாகிஸ்தான் தொடர்பாளர்களிடமிருந்து சில குறுஞ்செய்திகளைக் காட்டியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் நரோவல் மாவட்டத்தின் ஷாகர்கர் பகுதியில் உள்ள சிலர், பயங்கரவாதிகள் அவர்கள் இருக்கும் இடம் குறித்தும், அவர்கள் பாதுகாப்பாக வந்துவிட்டார்களா என்றும் கேட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட டிஜிட்டல் மொபைல் ரேடியோவை (டிஎம்ஆர்) பாகிஸ்தான் நிறுவனமான மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கியூமொபைல் ஸ்மார்ட்போன் தயாரித்துள்ளது.
டி.எம்.ஆர் தொகுப்பில் உள்ள செய்திகள், ஊடுருவும் பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டிய பிறகு அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை தெளிவாகக் காட்டுகின்றன.
கைப்பற்றப்பட்ட மற்ற ஆதாரங்களில் இருந்து கராச்சியில் தயாரிக்கப்படும் வெடி மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. ஜெய்ஷ் பயங்கரவாதிகள் அணிந்த காலணிகளும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டன.
மேலும், வயர்லெஸ் செட் மற்றும் ஜி.பி.எஸ் சாதனம் மீட்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையின் காரணமாக, பாகிஸ்தான் உலக அளவில் ஏற்கனவே பல விஷயங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதால், இந்தியா இதை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.
மேலும் பயங்கரவாத நிதித் தடுப்பு கண்காணிப்புக் குழுவுக்கு அழுத்தம் கொடுத்து , பாகிஸ்தானை கருப்பு பட்டியலுக்கு மாற்ற இந்தியா முயற்சி செய்யும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதிகள் முடக்கப்படும் என்பதால் பாகிஸ்தானுக்கு சிக்கல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0