திட்டமிட்டபடி வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்… மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்..!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 1:24 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

டெல்லி : நீட் தேர்வு முடிவுகளை எந்தவித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதில், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். இன்னும் சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் 2 மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, அவர்களுக்கும் சேர்த்து தான், நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் எனக் கூறி என்டிஏ (NTA) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

Views: - 220

0

0