ஏன் ஓடறீங்க… தமிழ்நாட்டை பற்றி இன்னும் நிறையா சொல்ல வேண்டியது இருக்கு.. வெளிநடப்பு செய்த திமுகவை மிரள வைத்த நிர்மலா சீதாராமன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 2:18 pm
Dmk Walkout - Updatenews360
Quick Share

நாடாளுமன்றத்தில் கடுகடுத்த நிர்மலா சீதாராமன்… வெளிநடப்பு செய்த திமுக : டிவியில் போய் பாருங்கள்.. ஆவேசப் பேச்சு!!!

மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழ்நாடு அரசுக்குக் கடன் சுமையே இல்லை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி.. ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது.. கடன் வாங்கி கட்டுகிறோமா இல்லை நிதி ஒதுக்குகிறோமா என்பது எங்கள் விருப்பம். அது எங்களுடைய கொள்கை சார்ந்த முடிவு.. தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆக தமிழக அரசே காரணம்.

எனவே, மதுரை எய்மஸ் கட்டுமான தாமதத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். பொதுவாக 700 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன;

ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. இவை தொற்று நோய் பரவல் ஏற்படும் போது பெரியளவில் உதவியாக இருக்கும்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 99 மாணவர்கள் இப்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள்” என்றார். அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

குறிப்பாக நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில் திமுக எம்பிக்கள் வெட்கம்! வெட்கம்! எப்போது? எப்போது? என முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு குறித்துப் பேச நிறைய இருக்கிறது. நான் சொல்கிறேன் டிவியில் சென்று பாருங்கள்” என்று ஆக்ரோஷமாகப் பதில் அளித்தார்.

Views: - 252

0

0