“அடுத்த 4 நாட்களுக்கு வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
28 August 2020, 10:38 amவட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பகுதி வடக்கு ஒடிசா கடற்கரைக்கு நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக ஒதிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 8 வட மாநிலங்களில் அதீத மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், ஒதிசா மாநிலத்தின் கலிங்கா நகர், ஜெய்ப்பூர் பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்நிலைகள் நிறம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் , இயற்கை இடர்பாடுகளை தவிற்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா அச்சம் நீடிக்கும் சூழலில் மழையின் தாக்கமும் அதிக அளவில் இருப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
0