‘இப்படியும் நோயாளிகளை கையாளலாம்’: நடனமாடி உற்சாகப்படுத்திய செவிலியர்…லைக்குகளை அள்ளும் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
7 September 2021, 5:46 pm
Quick Share

படுக்கையில் உள்ள நோயாளியை சினிமா பாடலுக்கு நடனமாட வைத்த செவிலியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலங்கானாவில் உள்ள மறுவாழ்வு மையம் ஒன்றில் நோயாளியை உற்சாகப்படுத்த செவிலியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடுகிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த நோயாளியும் சிறிது நேரத்தில் செவிலியர் உடன் இணைந்து நோயாளியும் படுக்கையில் படுத்த படியே உற்சாகமாக நடனமாடுகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. மறுவாழ்வு மையத்தில் செய்யும் வேலையை எவ்வளவு விருப்பமாகச் செய்கிறார் இந்தப் பெண்ணின் சேவையை வெறும் செவிலியர் என்கிற வார்த்தைக்குள் அடக்க முடியாது என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Views: - 344

0

0