பழைய ரூ.5, ரூ10, ரூ.100 நோட்டுகள் வாபஸ்? ரிசர்வ் வங்கி விளக்கம்!!

23 January 2021, 6:25 pm
100 Rupees - Updatenews360
Quick Share

பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் திரும்பப் பெறப்படும் என்ற தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

HOLY No. 000786 and 786000 in Rs 100,20,10 Note want buyer - Rice Puller  Forum

பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த முடிவு மங்களுரூவில் நடைபெற் றமாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Indian 5-rupee note - Wikipedia

மங்களுரூவில் நடைபெற்ற வங்கிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பொது மேலாளர் மகேஷ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதியரூபாய் நோட்டுக்கள் விடப்படும் என கூறினார்.

10 Indian Rupees banknote (Gandhi no date) - Exchange yours for cash today

பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தகர்கள் மற்றும் வணிகஸ்தர்கள் ஏற்கவில்லை என்றும், இது வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என கூறினார்.

Views: - 8

0

0