அதிகாலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்..! 5 பேரைக் கைது செய்தது டெல்லி போலீஸ்..!

24 January 2021, 11:29 am
Delhi_Police_UpdateNews360
Quick Share

டெல்லியில் கான் மார்க்கெட் அருகே இன்று அதிகாலையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பிய இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கான் மார்க்கெட் பகுதிக்கு அருகே ஒரு சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்புவதாக புகார் வந்ததை அடுத்து, காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்தது எனக் கூறப்படுகிறது.

கான் மார்க்கெட் மெட்ரோ நிலையம் அருகே ஒரு சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்புகிறார்கள் என்ற புகாருடன் துக்ளக் சாலை காவல் நிலையத்தில் அதிகாலை 1 மணியளவில் போலீசாருக்கு அழைப்பு வந்தது. விசாரணை அதிகாரி சம்பவ இடத்தை அடைந்து யூலு பைக்குகளில் வந்த 2 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு இளைஞனைக் கண்டார்.

விசாரிக்கப்பட்ட பின்னர், அவர்கள் இந்தியா கேட்டை சுற்றி பார்வையிட வந்ததாகவும், யூலு பைக்குகளை வாடகைக்கு எடுத்ததாகவும் கூறினர்.

அவர்கள் யூலு பைக்குகளில் பந்தயத்தைத் தொடங்கினர் என்றும், அனைவரையும் தங்கள் நாடுகளின் பெயரால் அழைக்க வேண்டும் என்று விதியை வகுத்ததாகவும் கூறினார். மேலும் அதில் ஒரு பாகிஸ்தானியர் இருந்த நிலையில், போட்டியில் அவரது வெற்றியைக் குறிக்கும் விதமாக பாகிஸ்தான் ஜிந்தாபாத்தை கூறியதாகத் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் அனைவரையும் தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0