90 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை..! வாகன ஓட்டிகள் ஷாக்..!

30 November 2020, 6:14 pm
Petrol_Price_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேசத்தின் போபாலில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 90 ரூபாயைத் தாண்டியுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

மத்தியபிரதேச தலைநகர் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 90.05 ஆகவும், டீசல் விலை ரூ 80.10 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக மத்திய பிரதேச பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் தான் இந்த விலை உயர்வு என அவர் மேலும் கூறினார்.

தவிர, அதிக வாட் வரி காரணமாகவும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

அஜய் சிங் மேலும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி விகிதம் முறையே 39 சதவீதம் மற்றும் 28 சதவீதமாக உள்ளது எனத் தெரிவித்தார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த விகிதங்கள் அதிகம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே மத்திய பிரதேசத்தின் சில நகரங்களில், முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ 91’ஐ தாண்டியுள்ளது என்று சிங் மேலும் கூறினார்.

Views: - 0

0

0