பெட்ரோல் விலை உயர்வு : உச்சநீதிமன்றம் உத்தரவு..!

8 September 2020, 1:03 pm
Quick Share

பெட்ரோல் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாள்தோறும் அதிகரிக்கப்படும் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் சாமானியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் சரமாரியாக உயர்கிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு வந்தது.

அப்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து தொடர்ந்து வாதிட முயன்றால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். இதனையடுத்து மனுதாரர் மனுவை திரும்ப பெற்ற நிலையில் பொதுநல மனு தள்ளுப்படி செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

Views: - 0

0

0