பி.எஃப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது..! ராமர் கோவிலுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்தது அம்பலம்..!

7 August 2020, 3:10 pm
ram_mandir_updatenews360
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ராமர் கோவில் பூமி பூஜை நாளில் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ) ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் அலீமின் கிளினிக்கில் சிலர் அமர்ந்து வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்புவது மற்றும் வகுப்புவாத நட்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை ட்வீட் செய்வது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குன்வர் ஞானஞ்சய் தெரிவித்தார்.

போலீசார் அந்த இடத்தை அடைந்தபோது டாக்டர் அலீம், கம்ருதீன் மற்றும் சாஹிபே ஆலம் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதைக் கண்டனர். இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட பி.எஃப்.ஐ.’யின் முன்னாள் அலுவலக பொறுப்பாளராகவும், தற்போது எஸ்.டி.பி.ஐ.’க்கு ஊடக பொறுப்பாளராகவும் பணியாற்றும் சாஹிபே ஆலமுடன் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் அலீம் மற்றும் கம்ருதீன் இருவரும் எஸ்.டி.பி.ஐ வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்களாக இருந்ததாகவும், எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ உடனான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, ராமர் கோவில் பூமி பூஜை நடந்த பின்னர், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) துருக்கியில் உள்ள ஹாகியா சோபியாவை பாபர் மசூதியுடன் ஒப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட்டை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

“பாபர் மசூதி எப்போதும் ஒரு மசூதி தான். ஹாகியா சோபியா எங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். அநியாய, அடக்குமுறை, வெட்கக்கேடான மற்றும் பெரும்பான்மையான மக்களை திருப்திப்படுத்தும் தீர்ப்பால் நிலத்தை அபகரிப்பதன் மூலம் அதன் நிலையை மாற்ற முடியாது. மனம் உடைந்து போக வேண்டிய அவசியமில்லை. சூழ்நிலைகள் என்றென்றும் நிலைக்காது.” என்று அது ட்வீட் செய்தது.

இருப்பினும், கடுமையான கண்டங்களுக்குப் பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டது.

இதேபோல், அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் கோவிலை இடித்தபின் ஒரு மசூதி கட்டப்படும் என்று ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிட்டார்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய போது, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘இந்து ராஷ்டிரா’வுக்கு அடித்தளம் அமைத்துள்ளார் என்று கூறினார்.

அயோத்தியில் பாபர் மசூதிக்காக நீதிமன்றத்தில் வாதிட்ட இக்பால் அன்சாரி முதற்கொண்டு பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், இது போன்ற சில விஷமிகள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை முளையிலேயே அரசு தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 5

0

0