ஆயுத பூஜை வழிபாடு: நாட்டுமக்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து..!!

Author: Aarthi Sivakumar
14 October 2021, 8:39 am
Quick Share

புதுடெல்லி: ஆயுத பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள். அநீதியை அழித்ததன் அடையாளம், துர்கா. பெண் சக்தியின் கடவுள் வடிவம். தேச கட்டுமானத்தில் பெண்கள் அதிக மரியாதையும், சம பங்களிப்பும் பெறக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் நல்ல உடல்நிலையும், மகிழ்ச்சியும், வளமும் அமைய துர்க்கையை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், துர்கா தேவியின் ஆசி, நமக்கு எப்போதும் இருக்கட்டும். அந்த ஆசி, சமூகத்தில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் பெருக்கட்டும். அனைவரது வாழ்க்கையும் ஒளிர வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Views: - 131

0

0