தீபாவளி பண்டிகைக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்: பிரதமர் மோடி…!!

10 November 2020, 8:50 am
modi local buy - updatenews360
Quick Share

புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அந்த உரையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள். ‘தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்கள்’ என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதால், உள்நாட்டு அடையாளம் வலுப்படுவதுடன், அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு தீபாவளி ஒளிமயமாகும் என தெரிவித்துள்ளார்.

வெறும் விளக்கு மட்டுமல்ல, தீபாவளிக்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்துவீர்களோ, அவற்றை உள்நாட்டு பொருட்களாக வாங்கினால், அவற்றை தயாரிப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளை சந்தையுடன் நேரடியாக இணைக்கும் என்றும், இடைத்தரகர்களை அப்புறப்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், கிழக்கு உத்தரபிரதேச விவசாயிகளும் பலன் அடைவார்கள். விவசாயிகளுக்கு சொத்து விவர அட்டை வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Views: - 18

0

0