நவராத்திரி திருவிழா ஆரம்பம்: நாடு முழுவதும் பக்தர்கள் வழிபாடு…பிரதமர் மோடி வாழ்த்து…!!!

17 October 2020, 11:12 am
modi campaign - updatenews360
Quick Share

புதுடெல்லி: நவராத்திரி திருவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று நவராத்திரி கொலு திருவிழா துவங்குகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜெய் மாதா தி ! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் ! அம்பாளுடைய ஆசீர்வாதங்களுடன், நமது நாடு பாதுகாப்பாகவும், மக்கள் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கட்டும். ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர அவளது ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நவராத்திரியின் முதல் நாளில் தேவி படான் கோவிலில் வழிபாடு செய்தார். மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா நவராத்திரி திருவிழாவில் பங்கேற்று துர்கா பூஜை நடத்தினார்.

Views: - 13

0

0