ராமர் கோவில் வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல்..!

2 September 2020, 3:57 pm
ram_mandir_updatenews360
Quick Share

ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சில வாரங்கள் கழித்து, அயோத்தியில் உத்தேச ராமர் கோவிலுக்கான வரைபடத்த்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் (ஏ.டி.ஏ) ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஏ.டி.ஏ கூட்டத்தில் இந்த வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டப்படும் நிலத்தின் பரப்பளவு சுமார் 13,000 சதுர மீட்டர் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகஸ்ட் 29 அன்று மற்ற தேவையான ஆவணங்களுடன் ஒப்புதலுக்கான வரைபடத்தை, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தார்.

வரைபடத்திற்கு அனுமதி வழங்குவதில் ஏடிஏ அதிகாரிகள் மத்தியில் முழுமையான ஒருமித்த கருத்து இருப்பதாக ஏடிஏ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், கோவில் கட்டுமானம் இதன் பிறகு எந்த நேரத்திலும் தொடங்க முடியும்.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில்  கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் 142’வது பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தது. அங்கு மசூதி கட்டிக்கொள்ளவும் அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0