டெல்லியில் கடுமையான காற்று மாசு: பொதுமக்கள் அவதி..!!

11 November 2020, 9:28 am
Delhi_UpdateNews360
Quick Share

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்கால பனிப்பொழிவின் இடையே காற்று மாசு கலந்து பார்வை இடைவெளியை குறைக்கிறது. மேலும், கண் எரிச்சல், சருமநோய் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.

delhi airpollution - updatenews360

டெல்லியில் நேற்று சாலையெங்கும் பனிமூட்டம் போல புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகநத் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மந்திர் மார்க், பஞ்சாபி பாக், ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றுத்தர குறியீட்டு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு மிகவும் கடுமையான நிலையில் பதிவானது. காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் அது நல்ல நிலை ஆகும்.

காற்றின் தரக்குறியீடு 50க்கு மேல் 100 வரை என்பது சுமாரான நிலை. 100க்கு மேல் 200 வரை மிதமான நிலை. 200-க்கு மேல் 300 வரை மோசமான நிலை. 300க்கு மேல் 400 வரை மிக மோசமான நிலை. 400க்கு மேல் மிக கடுமையான நிலை ஆகும். நேற்று டெல்லியில் 487 ஆக காற்றின் தரக்குறியீடு இருந்தது.

delhi air pollution - updatenews360

கொரோனா நோய்த் தொற்று பரவல் காலத்தில், டெல்லியில் காற்றில் மாசு அளவு மிகவும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் காற்று மாசு குறையுமா என்பது சந்தேகம்தான் என்று நிபுணர்கள் கூறியிருப்பது மேலும் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

Views: - 22

0

0