இன்று தொடங்குகிறது புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை திருவிழா: ஒடிசாவில் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!!

12 July 2021, 1:21 pm
Quick Share

ஒடிசா: உலகப் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை திருவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு 2 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புரி ஜெகந்நாதர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற மற்றும் ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும்.

65 பட்டாலியன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா பேரிடர் காலம் என்பதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். போலீசார் மட்டுமின்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ரத யாத்திரையில் பங்கேற்கும் கோவில் ஊழியர்களுக்கு கோவிட் இல்லை என்ற சான்றிதழும், இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 136

0

0