டெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி..! கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..!

25 February 2021, 8:59 pm
rahul-gandhi_sea_updatenews360
Quick Share

ராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவரை, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக கைவிட்டு, கேரளாவில் கடலை சுற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

“ராகுல் காந்தி கேரளாவுக்கு வந்த பிறகு ஒரு பக்கம் டிராக்டர் ஓட்டிக்கொண்டும் மறுபக்கம் மீனவர்களுடன் கடலுக்குச் செல்கிறார். டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை ராகுல் காந்தி முற்றிலுமாக புறக்கணித்துள்ளார். மாறாக, அவர் கேரளாவுக்கு வந்து விவசாயிகளுக்கு தனது ஆதரவை வழங்குகிறார்” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேரளாவின் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ள ராகுல் காந்தி நேற்று கேரளாவிற்கு வருகை தந்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொல்லத்தில் உயர் கடலில் உள்ளூர் மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார்.

பின்னர், தங்கசேரி கடற்கரையில் மீனவர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். “நீங்கள் செய்வதை நான் புரிந்துகொண்டு மதிக்கிறேன். நீங்கள் செய்வதை நான் பாராட்டுகிறேன்

பல முறை, நாங்கள் மீனை சாப்பிடுகிறோம், ஆனால் அதன் பின்னால் இருக்கும் கடின உழைப்பையும் அது எங்கள் தட்டை எவ்வாறு அடைந்தது என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

தனது பேச்சு முழுவதிலும் மீனவர்களை சகோதரர்கள் என்று அழைத்து உரையாற்றிய அவர், மீனவர்களில் பலர் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.

ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தம் தொடர்பானதாகக் கூறப்படும் சர்ச்சைகள் தொடர்பாக கேரள அரசாங்கத்தை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் இழுவைப் படகுகளுடன் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்றார்.

கேரள காங்கிரசார் , அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தம் தொடர்பாக மாநிலத்தில் இடது அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளதால், ராகுல் காந்தியின் மீனவர்களுடனான தொடர்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சர்ச்சையை அடுத்து, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஈ.எம்.சி.சி மற்றும் கேரள மாநில உள்நாட்டு நீர்வழி கார்ப்பரேஷன் (கே.எஸ்.ஐ.என்.சி) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0