குடியரசுத் தலைவருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Author: Udhayakumar Raman
25 October 2021, 9:36 pm
Quick Share

தாதா சாகிப் பால்கே விருது வென்ற நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு இன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.இந்த விருதை தனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பணம் செய்வதாக மேடையில் ரஜினிகாந்த் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.

இந்நிலையில், திரைபிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

Views: - 243

0

0